Wednesday, October 28, 2009

எட்டாவது தமிழ் இணைய மாநாடு ஜெர்மனி

ஐரோப்பாவில் முதன் முறையாக நடைபெறும் இத்தகயை மாநாடு, கொலோன பல்கலைக்கழகத் தத்துவ இயல் துறையின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் பொன்கார்ட்ஸ் மற்றும் தமிழ்நாட்டுக் குழுவின் தலைவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான பேராசிரியர் எம் அனந்தகிருஷ்ணனின் முன்னிலையில் துவ‌க்கிவைக்கப்பட்டது.

இந்த மூன்றுநாள் மாநாடு கொலோன் பல்கலைகழத்தின் இந்தியப் பண்பாடு, வரலாறு, இலத்தியத்துறை மற்றும் தமிழ்த்துறையின் ஏற்பாட்டில் நடைபெறுகிற‌து.

200ம் ஆண்டில் தொடஙகப்பட்ட உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்ற (உத்தமம்) அமைப்பின் கீழ் நடைபெறும் தமிழ் இணைய மாநாடு தமிழ்க் கணினி, தகவல் தொழில்நுட்பம், பல துறைகளில் தமிழ் இணைய வளர்ச்சி ஆகியவை குறித்து கணினித்துறை சார்ந்த நிபுணர்கள் ஒன்று கூடி விவாதிக்கும் அரங்காக இடம்பெற்று வருகின்றது. புலம்பெய்ர்ந்த தமிழர்களும் மாநாடுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிலிருந்து 100க்கும் மேலான தமிழ் பேசும் பேராளர்கள் இந்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டனர்.

தமிழ் பேசும் அனைத்துலப் பேராளர்களை வரவேற்ற பேராசிரியை டாக்டர் பான்கார்ட்ஸ், ஐரோப்பாவின் மையமாக விளங்கும் கொலோனில் இந்திய தகவல் நுட்ப நிறுவனங்கள் செயல்பட ஊக்குவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

விப்ரோ, மைன்ட்ரீ போன்ற நிறுவனங்கள் அங்கு செயல்படத் தொடங்கிவிட்டன. மாநாட்டின் துணைத்தலைவரான பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ், தமிழ்நாட்டிற்கு வெளியே இயங்கும் பல்கலைக்ழகங்களில், கொலோன் பல்லைக்கழகம் 60,000க்கும் மேற்பட்ட தமிழ் நூல் தொகுப்பைப் பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ் நாட்டின் வாழ்த்தைத் தெரிவித்த பேராசிரியர் அனந்தகிருஷ்ணன், அடுத்த ஆண்டு தமிழ் நாட்டில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடர்பில் அப்போது தமிழ் இணைய மாநாடு 2010-யும் நடத்துமாறு உத்தமம் அமைப்பைக் கேட்டுக்கொண்டார்.

தமிழ் இணைய மாநாடு 2010 நடைபெறுவதற்கான எல்லா வசதிகளையும் தமிழ் நாடு அரசு வழங்கும் என அவர் தெரிவித்தார்.. மற்றவர்கள் செய்ததைப் பின்பற்றித் தமிழிலும் அவ்வாறே செய்யாமல் தமிழ்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கத்தைப் புகுத்திப் புதியனவற்றைத் தோற்றுவித்து மற்றவர்கள் பின்பற்றுமளவுக்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் மேலும் தமது தொடக்க உரையில் கேட்டுக்கொண்டார் .

100,000-க்கும் மேற்பட்ட பொறியியல்துறை சார்ந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்பங்கள் 100க்கும் குறைவாகவே திட்டமிடப்படுவதாக அவர் சொன்னார்.

தமிழ் தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிபுணர்கள் எதிர்கொள்ளும் நடப்புப் பிரச்னைகள் குறித்து ஆய்வுக் கட்டுரைகள் பல தாக்கல் செய்யப்பட்டதாகவும் அவற்றிலிருந்து தகுந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது தமது குழுவிற்குப் பெரும் சிரமமாக இருந்ததாகவும் மாநாட்டு நிகழ்சிக் குழுவின் தலைவர் பேரா.வாசு ரங்கநாதன் தெரிவித்தார். பெரும்பாலான ஆய்வுக் கட்டுரைகள் தமிழ்நாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்

ஆய்வரங்கில் பேசிய மலேசிய முத்து நெடுமாறன் மூன்றாம் தலைமுறை கையடக்கக் கருவிகளில் தமிழில் எழுதவும் படிக்கவும் முடியும் என்பதை விளக்கிக் காட்டினார், ஐபோன், அன்ட்ரோய்ட், நோக்கியா போன்ற கைத்தொலைபேசிகளில் தமிழ் பென்பொருளைக் கையாளமுடியும் என்பதை விளக்கிய போது குழுமியிருந்தோர் மகிழ்ச்சியுற்றனர்.

பெங்களூரு இந்திய அறிவியல் ஆய்வுக்கழகப் பேராசிரியர் தகவல் தொழில்நுட்பம் வழி படிப்பறிவு இல்லாதவர்கள் மற்றும் பார்வையற்றோர் ஆகியவர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரத்தக்க தொழில்நுட்பத்தை விளக்கிக் காட்டினார். தமிழ் நூல் வாசகத்தை ஒலி வடிவமாக மாற்றிப் பிழையறப் படிக்கும் கணினியை அவர் காட்டினார்.

மேலும் அக்கணினி ஒருவரின் கையெழுத்தையும் அடையாளங்கண்டு கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளது. கொலோன் பல்கலைக்கழகம் இணையம் வழி சமஸ்கிருத, தமிழ் அகராதிகளை உருவாக்கியுள்ளதைப் பேராசிரியர் தாமஸ் மால்ட்டன் எடுத்துரைத்தார் .

எல்லா வகையான கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சார்ஜர்கள் உருவாக்கம்

சகல வகையான கையடக்கத் தொலைபேசிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய புதிய வகை சார்ஜர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படகிறது.

இதுவரை காலமும் குறிப்பிட்ட வகைக் கையடக்கத் தொலைபேசிக்கு அதே வகையைச் சேர்ந்த சார்ஜர்களே பயன்படுத்தப்பட்டு வந்தது.

எனினும், எதிர்வரும் காலங்களில் எந்தவொரு கையடக்கத் n;தாலைபேசிக்கும் ஒரே சார்ஜரின் மூலம் மின் சக்தியை வழங்க முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹேன்ட் செட்டின் ஊடாக இந்த சார்ஜரைப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சார்ஜர்கள் அதிகளவு மின்சாரத்தைப் பயன்படுத்தாது எனவும், மிக நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

புதிய வகை சார்ஜர் உற்பத்தியின் மூலம் வருடாந்த பச்சைவீட்டு வாயு வெளியீட்டு அனர்த்தத்தின் ஒரு பகுதியை வரையறுக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2010ம் ஆண்டுன் முதல் அரையாண்டுப் பகுதியில் இந்த யுனிவர்செல் எனப்படும் புதிய வகை சார்ஜர்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்த முடியும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Nikon நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சாதனங்கள் (இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்! )

தொழில்நுட்ப உலகம், மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை, இச்சாதனங்களுக்கு அடிமையாக தவறுவதில்லை.

பார்த்தவுடன் பற்றிக்கொள்வது போல, வாங்கிவிடுவதற்கு ஆசை வருத்தூண்டும், புதிய இரண்டு சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

உலகின் முதலாவது புரொஜெக்டருடன் கூடிய டிஜிட்டல் கமெராவினை (first compact digital camera built-in projector) நிக்கொன் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'Nikon COOLPIX S1000pj ' எனப்பெயரிடப்பட்ட இக்கமெராவினை கொண்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படத்தினை, பெரிதாக்கி எந்த திரையிலும் உடனுக்குடன், பார்வையிடலாம்.

இதுவரை கமெரா திரையில் மாத்திரமே இந்த வசதி இருந்தது. கடந்த மாதம் முதல் சந்தைக்கு வந்த இக்கமெரா, இப்புதிய வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்!

ஃபியூஜியின் முப்பரிமாண கேமரா

புகைப்படமெடுக்கத் தேவையான கேமராக்கள் தயாரிப்பில் மிகவும் பிரபலமாக விளங்கும் ஃபியூஜி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது முதல் முறையாக முப்பரிமாண (3டி) கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தவிர உலகிலேயே மிகவும் மெல்லிதான கேமராவையும் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முப்பரிமாண கேமரா மூலம் படமெடுப்பதோடு, அதற்கான கண்ணாடி இன்றி படங்களை 3 கோணங்களில் பார்க்கலாம்.

தேவைப்பட்டால் இரு பரிமாணத்திலும் இதில் படமெடுக்கும் வசதி உள்ளது. உலகிலேயே மிகவும் மெல்லியதான 10எக்ஸ் ஜூம் கேமராவையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில் சூப்பர் சிசிடி இஎக்ஸ்ஆர் சென்சார் உள்ளதால் மிகவும் துல்லியமாக படமெடுக்க உதவுகிறது. முப்பரிமாண கேமராவின் விலை ரூ. 39,999. மெல்லியதான கேமராவின் விலை 18,999